24 December 2007

தீயில் இறங்காமல் அதன் வலியை உணரமுடியாது.



திருநங்கைகளின் வாழ்கை கண்ணீரையும் , இந்த சமூகத்தின் மேல் எனக்குள்ள கோபத்தையும் சரிவிகிதத்தில் வரவைக்கிறது. அவர்களின் வாழ்க்கைக்கே வழி சொல்லாத அரசும் சமுதாயமும் அவர்களின் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்லும்?. காலங்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிக்கிடக்கும் நாம் எப்ப தான் அவங்களை அங்கிகரிக்க போகிறோம்....இத்தனை வருடம் இதனை கண்டும் காணாமல் இருந்து விட்டோம் .இப்பொழுது அவர்களிடமிருந்தே ஒரு குரல் கேட்கிறது.


இன்று தனது வாழ்க்கையை எழுத்துக்களாக்கும் வித்யா , தான் அனுபவித்த வலிகளை சொல்ல வருகிறார். அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமூகத்திற்க்கு சாட்டையடியாக இருக்கும்.அதற்க்கான பதில்கள் நம்மிடத்தில் இல்லை .

இந்த புத்தகம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்ற நம்பிக்கையுடன் ,இந்த வருடத்து புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கும் முதல் புத்தகம் இது தான்.

4 comments:

M.Rishan Shareef said...

நானும் படிக்கவிரும்புகிறேன்.இங்கு புத்தகமாகப் பெறுதல் கடினம்.இணையத்தில் வழியிருப்பின் சொல்லுங்கள் நண்பரே...!

- யெஸ்.பாலபாரதி said...

//இந்த வருடத்து புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கும் முதல் புத்தகம் இது தான்.//

பரவாயில்லையே.. நான் நினைச்சு வச்சு இருக்குற மாதிரியே நீங்களௌம் நிசைச்சு இருக்கீங்க!

Anonymous said...

//நானும் படிக்கவிரும்புகிறேன்.இங்கு புத்தகமாகப் பெறுதல் கடினம்.இணையத்தில் வழியிருப்பின் சொல்லுங்கள் நண்பரே...!//

இருக்கே.. www.kamadenu.com அல்லது www.nhm.in தளங்களுக்குச் சென்று பாருங்கள் ஷெரிப்.

-நண்பன்

சரவணன் said...

//நானும் படிக்கவிரும்புகிறேன்.இங்கு புத்தகமாகப் பெறுதல் கடினம்.இணையத்தில் வழியிருப்பின் சொல்லுங்கள் நண்பரே...!//

லக்கிலுக்கிடம் சென்றால் படிக்கலாம் . (www.madippakkam.blogspot.com). என்ன ஒரு நூறு ரூபா கேக்குறாரு.