21 December 2007

அவதூறு விமர்சனம் ஆகாது

நந்திகிராமத்தை பத்தி எழுதலாமுன்னு தோனுச்சு. சரி எல்லாரும்போட்டு தாக்குறாங்களே அது என்ன தான் மேட்டர்னு பாத்தா , இப்படியும் நடக்குமானு இருக்கு....


தொடர்ந்து 30 ஆண்டுகளாக மக்கள் நலம் பேணும் அரசாக மேற்குவங்க இடதுசாரி அரசு திகழ்ந்துவருவதும்; தொடர்ந்து 7வது முறையாக வெற்றிபெற்றிருப்பதும் இந்தியாவுக்குள்ளும் இந்தி யாவுக்கு வெளியேயும் பிற்போக்காளர்களுக்கு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. எனவேதான் மேற்குவங்க அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்மத் துடன் கூடிய பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் நக்சலைட் முதல் மம்தா, பாஜக, ராம தாஸ், ஜெயலலிதா என எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். இது ஏதோ தற்செயலானதாகவோ, நந்திகிராமம் சம்பவத்தால் ஏற்பட்ட ஒற்றுமையோ அல்ல. மாறாக ஏற்கெனவே திட்டமிட்ட தளத்தில் உரு வான ஒற்றுமைதான், நந்தி கிராமத்தில் கலவரமாக வெடித்தது என்பதுதான் உண்மை.

சோவியத் யூனியன் இருக்கிறபோது அதற்கு எதி ராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களும் புனை சுருட்டுகளும் அளவற்றவை. ஏனெனில் ஏகாதிபத் திய ஆக்கிரமிப்பையும் அராஜகத்தையும் அத்துமீற லையும் ஓரளவு தடுத்து நிறுத்துவதில் சோவியத் யூனியன் ஆற்றிய பங்குபாத்திரம் முக்கியமானது. எனவே சோவியத் யூனியன் குறிவைத்துத் தாக்கப் பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குமுன் பன்முக உலகம் இயங்கியது. அதை தன்னுடைய ஒற்றை சாம்ராஜ்ய குடையின்கீழ் கொண்டுவர அமெரிக்கா விரும்பியது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு அதனுடைய முயற்சி எளிதானது. இதற்குத்தானே அவர்கள் சோவியத் யூனியன் மீது அவ்வளவு காழ்ப்புணர்ச்சி காட்டினார்கள்.

கிட்டத்தட்ட அதுபோன்ற ஓர் சூழலை இப்போது இந்தியாவில் உருவாக்க பிற்போக்காளர்களும் அதிதீவிரவாதிகளும் ஒன்றுகூடி முயற்சிக்கிறார்கள். மதவெறி சக்திகளுக்கு எதிராகவும்- தாராளமயம், தனியார்மயம், உலகமயத்திற்கு எதிராகவும் - ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிற, குரல்கொடுத்துக்கொண் டிருக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதோடு இணைந்து நிற்கிற இடதுசாரிக் கட்சிக ளுமே.

சரி இப்ப என்ன தான் சொல்ல வார?

முதல்ல இருந்து பாக்கலாம். நந்திகிராமில் இரசாயணத்தொழிற்ச்சாலை அமைக்க வேண்டுமென பட்டாச்சாரியாரின் தலைமயிலான மேற்குவங்க அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது.அதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது என்ற முயற்சியில் ஈடுபடடது. அந்த முயற்சியின் போதே அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதி விவசாயிகளின் எதிர்ப்பால், நிலம் கையகப்படுத்துவது வாபஸ் வாங்கப்பட்டது. அதன் பின் இரசாயணத் தொழிற்சாலையை நந்திகிராமில் நிறுவமாட்டோம் என்று பல்வேறு கூட்டங்களில் தோழர்கள் பலரும் , முதலமைச்சர் பாச்சார்யாவும் தெளிவாகவே கூறினர்.


இது நாள் வரை தொழிற்வளத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் முட்டுகட்டை போட்டு மேற்குவங்கத்தின் வளர்ச்சியை கெடுத்துவிடடனர் என்று கூச்சலிட்டுக்கொன்டிருந்த தி.காங். இந்த தொழிற்ச்சாலை வந்து வளர்சசி ஏற்ப்படடால் எங்கே இனி மேற்குவங்கத்தில் CPM ஆட்சிஐ மாற்ற முடியாதது மட்டுமல்ல ,வேறு எந்த கட்சிக்கும்,கட்சி அலுவலகம் கூட இருக்க அவசியமில்லாமல் போய்விடும் என்பதால் இப்பிரச்சனையை தனது கேவலமான அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். பல்வேறு அதிதீவிரவாதம் பேசும் குழுக்கழுடன் சேர்ந்து பூமி பாதுகாப்பு குழு என்னும் அமைப்பின் மூலம் தனது அரசியல் அலங்கோலத்தை அரங்கேற்றினார்.
மக்களை எழுச்சி பெறச் செய்து புரட்சியை தூண்டுவது தான் ஜனநாயகப்புரட்சி என்பார்கள்.இதனைத் தான் சி.பி.எம். புரட்சி என்றே கருதும். ஆனால் பூமி பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று மார்சு மாதம் 14ஆ தேதி , நந்திகிராமிற்க்குள் நுழைய முற்ப்பட்டது. அவர்களை தடுத்த வந்த போலீசுக்கும் அவர்களுக்கும் ஏற்ப்பட் மோதலில் 14 பேர் கொல்லபட்டனர்.அன்று நடந்த கலவரத்தின் மூலம் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அந்த குழு ஊரை ஆக்கிரமித்தது. அவர்களின் கட்டுப்பாட்டிற்க்குள் வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம், அந்த ஊரிலுள்ள தொடர்பு சாதனங்களையும், ஊருக்குள் செல்லும் வழிகளை அடைத்தனர்.

அதே நாளில் (மார்ச் 14) பட்டாச்சார்யா , நந்திகிராமில் அமைய இருந்த தொழிற்ச்சாலையை வேறு இடத்திற்க்கு மாற்றி விட்டோம் என்றும் அதற்க்கான வேலைகளே ஆரம்பமாகிவிட்டதென்றும் தெரிவித்தார்.

அங்கு முகாமிட்டுள்ள கூலிபடைக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் வந்தது,மக்கள் என்ற பெயரில்,விவசாயிகளின் வேடத்தில் கலவரம் பண்ண.அவங்க பாட்டுக்கு மக்களை வெளியேற்றிக்கொண்டும்,அதற்க்கு மறுப்பவர்களை கொலை செய்து கொண்டும் இருந்தனர். நிலத்திற்க்கும் ,வீட்டிற்க்கும் சட்ட ரீதியாக சொதமானவர்களை வெளியேறிவிட்டு ,அந்த வன்முறை கும்பல் கடந்த 9 மாத காலமாக வெறித்தாடவம் ஆடியது. இதில் இறந்த கட்சி உறுபபினர்களின் பட்டியலை ,பீமன்பாசு ( CPM மாநிலச் செயலாளர்) அடையாளததோடு வெளியிட்டார. சரி அப்ப செத்த போன மிச்சவங்க யாரென்று மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கையில் அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல மம்தா தயங்குவது நியாயம் தானே தல?

3 comments:

- யெஸ்.பாலபாரதி said...

தம்பி சாப்ளின், உங்க இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு. பெரிய ஆளாக வருவீங்க!! வாழ்த்துக்கள்.

Anonymous said...

//தொழிற்ச்சாலை வந்து வளர்சசி ஏற்ப்படடால் எங்கே இனி மேற்குவங்கத்தில் CPM ஆட்சிஐ மாற்ற முடியாதது மட்டுமல்ல ,வேறு எந்த கட்சிக்கும்,கட்சி அலுவலகம் கூட இருக்க அவசியமில்லாமல் போய்விடும//.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரு நைனா.

சரவணன் said...

//தம்பி சாப்ளின், உங்க இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு. பெரிய ஆளாக வருவீங்க!! வாழ்த்துக்கள்.//

கதையா?.. பாலா சாப், ஆனாலும் நீர் குசும்பன் ..