24 January 2008

'தலை' ப்புச் செய்திகள்


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இன்று முதல் எங்கள் அன்பு அண்ணன், (தல பாலா) தன் 60வது வயதில் காலடி எடுத்துவைக்கிறார். இதை பாசமிகு பார்டிகளுக்கு!! அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று மாலை அவர் அலுவலகத்தின் முன் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தள்ளாத வயதில் தனக்கு எதுக்கு இதெல்லாம் என்று (காசி ) ராமேஸ்வரம் போய்விட்டதால் கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்படுகிறது . (அடுத்த வருசம் ரஜினி மாதிரி இமயமலை போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். )


(பி.கு. இந்த வயசுலையாவது அவருக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று அனைத்து சாமிகளையும் , பெண்களை பெத்த அனைத்து அப்பன்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். )


18 January 2008

இது தான் பார்ப்பனியம்

நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).


ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.


வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.


பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).

தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.

13 January 2008

உங்கள் மனநிலை எப்படி?

பொதுவாகவே நாம் ஒரு பண்டிகைனாலோ ,ஒரு விசேஷம்னாலோ எண்ணெய் தேய்து குளிப்பது உண்டு .அதுவும் எங்க வீட்டுல சாதாரணமாகவே, வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் குளியல் உண்டு. அதுவும் தீபாவளின்னா சொல்லவே தேவையில்லை, நடுராத்திரி 5 மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு நம்மள பாடா படுத்திருவாங்க. ஊரில் இருந்த வரை இந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்த நான், சென்னைக்கு வந்த நாள் முதல் எண்ணெய் குளியலை மறந்தேவிட்டேன். ( நல்ல வேளையாக குளியலை மறக்கலை). சில நாள் முன்பு எங்கள் ஊருக்கு போயிருந்தபோது , இதுபற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது என் நண்பன் ஒருவன், " எங்க அப்பத்தாக்கு கூட போன மாசம் தான் எண்ணெய் குளியல் நடந்தது " என்றான். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின் அவனே விளக்கினான் , " பல நாட்களாக உடல் நலமில்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கும் பெருசுகள் , தங்களின் சொத்துக்களின் வாரிசுகள் கவனிக்காததால் படுக்கையிலேயே மலம் இருந்துகொண்டும் அதன் மேலையே படுத்துக்கொண்டும் இருக்கும் 90வயதை கடந்தவர்கள் , நன்றாக வாழ்ந்து இன்று நாற்றத்தின் நடுவே வாழ்க்கையை சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் குளியல் நடத்தப்படுகிறது. இப்படி அவர்கள் படும் அவஸ்தையை சகிக்க முடியாமலோ , அவர்களையே சகிக்க முடியாத பாசக்கார பிள்ளைகளும் இது போன்ற குளியலை நடத்துவார்கள். சொந்த பந்தங்களுக்கு சொல்லி விட்டு, ஒரு சுப முகூர்த்த திருநாளில் , படுத்திருக்கும் பெருசை எழுப்பி எண்ணெய் தேய்த்து , சீயக்காய் தேய்த்து குளியல் நடத்துவார்கள்.

அதுபோன்ற தள்ளாத வயதில் அவர்களின் உடலில் சூடு இல்லாமல் இருக்கும். இந்த பாசக்கார குளியலை தாங்காத அவர்களின் உடல் மேலும் குளிராகி நிச்சயம் அன்று இரவே ஆவி பிரிந்துவிடும். அவர்களுக்கு பாலூற்றி வழியனுப்பிவிடும் வைபவமும் உண்டு.

இதே போல் என் நண்பனின் தாத்தாக்கதையும்.
என் நண்பனின் தாத்தா மரணப் படுக்கையில் விழுந்து, மருத்துவர்களால் 'இனி தேறாது' என்று கைவிடப்பட்ட சூழ்நிலையில் உறவினர் மற்றும் சுற்றத்தாருக்கும் தகவல் அனுப்பபட்டது.எல்லோரும் வந்தாகிவிட்டது.முதல் சுற்று அழுகை முடிந்து காப்பி சாப்பிட்டு இரண்டாம் சுற்று அழுகைக்கு கூட்டம் போனது.தாத்தாவின் நெஞ்சுக்கூடு எந்த மாற்றமும் இல்லாமல் ஏறியிரங்கியது.முதல் இரவு கழிந்து,அடுத்த இரவும் வந்தது.அழுகை ஓய்ந்து கூட்டம் ரஜினி படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தது.அவ்வப்போது ஒருவர் தாத்தா படுத்திருக்கும் அறைக்கு சென்று எட்டிப் பார்த்துக்கொள்கிறார். தாத்தாவிடம் எந்த மாற்றமும் இல்லை.உடலில் எந்த அசைவும் இல்லை.ஆனால் சீரான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது.அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படியே சென்றது.மெலிதாக கூட்டம் குறையத்தொடங்கியது.'பெரிசு உசிர புடிச்சு வைச்சுருக்கு..கணேசன் வாத்தியாருக்கு சொல்லியனுப்புங்க..ரெண்டு பேரும் அவ்வலவு சினெகிதம்..அவரு பார்த்தாதான் இது உயிர விடும்போல'.. என்றெல்லாம் பேச்சு கிளம்பிவிட்டது.அந்த வீட்டில் காப்பி ஆற்றுவது ஒரு தொடர் செயல் போல் ஆகிவிட்டது.செட்டியார் கடையில் புதிதாக மளிகை லிஸ்ட் கொடுத்தாகிவிட்டது.மாமா குடும்பமும், சித்தப்பா குடும்பமும் இருந்து காரியம் முடித்துவிட்டு செல்லும் திட்டத்தில் வந்திருந்தார்கள்.ஊரில் நிறைய வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.தாத்தா கிளம்புகிற முடிவில் இல்லை.ஒரு வயதான பாட்டி சொன்னாள்..'மண்ணாசை இருந்தாலும் இப்படித்தான் இழுத்திட்ருக்கும்..கொஞ்சம் பாலோடு மண்ணை கலந்து கொடுங்க' என்றாள்.கூட்டம் யோசித்தது.நண்பன் சொன்னான்'பேசாமல்..நைட் எல்லோரும் தூங்கின பிறகு தலையனையோடு அந்த ரூமுக்கு போய்ட்டு வந்துரவா?'என்று.எல்லோரும் பேசி கொஞ்சம் மண்ணை பாலோடு கலந்து தாத்தாவுக்கு கொடுக்கச் சென்றபோது தாத்தா தலைசாய்ந்து மூச்சில்லாமல் இருந்தார்............

இது சரியா தவறா என்ற வாதத்திற்க்கு நான் வரவில்லை. ஆனால் இது போல் நமக்கும் ஒரு நாள் நடக்கும், அன்று நம் சொந்தங்கள் எண்ணெயுடன் வந்தால் ,எதிர்து போரட முடியாததால் , படுத்தேயிருப்போம். அப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருப்போம் என்று சொல்லத்தெரியவில்லை. ( சொல்லத்தெரியவில்லையா இல்லை நினைக்கவே பயமான்னு தெரியல ).