24 January 2008

'தலை' ப்புச் செய்திகள்


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இன்று முதல் எங்கள் அன்பு அண்ணன், (தல பாலா) தன் 60வது வயதில் காலடி எடுத்துவைக்கிறார். இதை பாசமிகு பார்டிகளுக்கு!! அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று மாலை அவர் அலுவலகத்தின் முன் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தள்ளாத வயதில் தனக்கு எதுக்கு இதெல்லாம் என்று (காசி ) ராமேஸ்வரம் போய்விட்டதால் கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்படுகிறது . (அடுத்த வருசம் ரஜினி மாதிரி இமயமலை போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். )


(பி.கு. இந்த வயசுலையாவது அவருக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று அனைத்து சாமிகளையும் , பெண்களை பெத்த அனைத்து அப்பன்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். )


2 comments:

- யெஸ்.பாலபாரதி said...

சொன்ன வாழ்த்தில்.. எனக்கு பிடிச்ச வார்த்தையே.. //பெண்களை பெத்த அனைத்து அப்பன்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்// இது தான். :)
ஹிஹிஹி!

லக்கிலுக் said...

அவரது வயது இப்பதிவில் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அவர் வயதுக்காவது மரியாதை கொடுக்கவும். ஒரு 70 வயது முதியவரை இந்த வயதிலும் பின்னூட்டம் போட வைத்த உங்களை என்ன சொல்லி திட்டுவது?