02 February 2008

யார் சொல்ல யார் எழுதியது

இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத அளவுக்கு காய்ச்சலில் படுத்திருந்தேன். இளையராஜாவின் இசையில் செல்பேசி ஒலித்தது.வலையுலகின் மூத்தபதிவர் அழைத்திருந்தார்.பொதுவாக மொக்கை கும்மிகளுக்கு மட்டுமே அழைக்கும் அவர் இன்று எதோ முக்கியமான செய்தி என்று பீடிகையுடனே ஆரம்பித்தார்.கண் பார்வை இழந்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகவும்,அவர்கள் சொல்ல சொல்ல நாம் எழுத வேண்டும் என்றும், என்னால் அப்படி எழுத முடியுமா என்றும் கேட்டிருந்தார். சரி தல சொன்னதுக்கப்புறம் மறுபேச்சு ஏது என்று அவர் கொடுத்த எண்னை தொடர்பு கொண்டு, திரு. மேத்தியூவிடம் பேசி, நாளை வருவதாக பதிவு செய்துகொண்டேன்.

மறுநாள் என் பரீச்சைக்கு செல்வது போல ஒருவித பதற்றத்தோடனேயே கிளம்பினேன். 12:30 மணி பரிச்சைக்கு 11;45 க்கு வண்டியை தட்டினேன். சுமார் அரைமணி நேரத்தில் லயோலா கல்லூரி. மேத்யூக்கு தொலைபேசியில் அழைத்தால், தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதாகவும் தேர்வு அறைக்கு சென்றுவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.சரியென்று தேர்வு அறையை தேடிச் செல்வதற்க்குள் தாவு தீர்துவிட்ட்து. ( எவ்வளவு பெருசா கட்டிருக்கானுங்க).அங்கு சென்று தேர்வு மேற்ப்பார்வையாளரிடம் ஒரு சலாம் போட்டு அறிமுகம் செய்து கொண்டேன்.அவரின் முதல் கேள்வியே அதிர்சியாக்கியது.
தமிழ் தெரியுமா ? , என்றார். இவ்வளவு நேரம் நாம் தமிழில் தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றேன் (நம்ம பட்டிக்காட்டு பாஷையையும் மூஞ்சியையும் பார்த்து ஆங்கிலம் தெரியுமானு கேட்டிருந்தால் நியாயம்). அவரே விளக்கினார், அங்கு ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் மாணவனுக்கு தேர்வு எழுதுவதாக சொன்னவர் வரவில்லையென்றும், எனக்கு முன் இதே போல் தேர்வு எழுத வந்திருந்த பல பேருக்கு தமிழ் எழுதுவதில் தகராறு என்றார். நானும் சரியென்று எழுத ஆரம்பிக்கும் போது பதிவுசெய்திருந்த நபர் வந்த்தால் வேறுஒரு மாணவனுக்கு ஆங்கில பரீச்சை எழுத ஆரம்பித்தேன்.

தேர்வு எழுத தரப்பட்ட தாளில் “ WRITTEN BY SCRIBE “ என்று அச்சடிக்கப்பட்டிருந்த்து. இதன் மூலம் அந்த விடைத்தாள் கண் பார்வை இழந்தவர்களுக்காக மற்றவர்களால் எழுதப்பட்ட்து என்று திருத்துபவருக்கு தெரிவிக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட விடைத்தாளில் உள்ள எழுத்துப்பிழைகள் கண்டுகொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிந்துகொண்டேன்.

நான் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நபர் , தழிழ் துறையை சார்ந்தவர். தமிழில் நல்ல ஆர்வம் உள்ளவர் . ஆனால் அத்துறையில் வேறு ஏதேனும் ஒரு மொழியை முதலாம் ஆண்டு மட்டும் எழுத வேண்டும் போல , அதனால் ஆங்கிலத்தை தேர்வு செய்திருந்தார்.நான் அங்கு சென்றது அவர் சொல்வதை அப்படியே எழுதுவதற்க்கு. ஆனால் அவரால் ஒரு வாக்கியத்தைக்கூட தப்பில்லாமல் ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லை. (இதை குறையாக சொல்லவில்லை , நட்ந்தது அப்படியே பதிவு செய்யப்படுகிறது.). வேறு வழியில்லாமல் நானே தேர்வை முழுவதும் எழுதவேண்டியதாகி விட்டது. நல்லவேளை கேள்வி நம்ம தம்மாத்துண்டு அறிவுக்கு எட்டியதால் , எப்படியும் அவர் தேரிடுவார்.
எழுதி முடித்துவிட்டு ஒருவித மனநிறைவோடு கிளம்பும்போது தான் மேத்யூவை சந்தித்தேன் . அவரிடமும் ஒரு வணக்கத்தையும் அறிமுகத்தையும் வைத்துவிட்டு கிளம்பினேன். கல்லூரியில் இருந்து வண்டி நிறுத்தம் வரை நடக்கும் போது , தலைக்கும் ஒரு நன்றியை தெரிவித்து விட்டு(தொலைபேசியில் தான்) வண்டியைக் கிளம்பும் போது தான் காலில் எதோ உறுத்தியது, மூன்று உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறைகள்.

துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் என்று நினைக்கும் கற்ப்புக் காவலர்களின் நிர்வாகம் அது. துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே தன் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் கல்லூரி, ஆண்மகன்களின் கற்ப்பைக் காக்க ஆணுறையை பரிந்துரைக்கிரார்களோ என்னவோ. வந்தோமா பரீச்சை எழுதினோமா போனோமானு இல்லாம நமக்கெதுக்கு ஊர் வம்பு .

1 comment:

Ram Jai Pradeep said...

superb mapla....nice narration
...keep the fire going