07 February 2008

NHM WRITER- தமிழில் எழுத


இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி. பதிவுலக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ”New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்காங்க. Demo காட்டப் போறாங்க. வர்றியா?” என்று ‘சாட்டர்டே டிஸ்கோதேவுக்கு வர்றியா?' பாணியில் கேட்டிருந்தார். நான் பயன்படுத்தும் தமிழ் மென்பொருள் எனக்கு திருப்திகரமாக இருந்தபோதிலும் புதியதாக என்னதான் செய்திருப்பார்கள் என்று Demoவுக்கு கிளம்பினேன். உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். இருவாரங்களாக NHM Writer மூலமாகத் தான் தமிழில் தட்டச்சிடுகிறேன். சுலபமாகவே இருக்கிறது. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது. * மொத்த மென்பொருளுமே 850 KBக்குள் இருப்பதால் தடாலடியாக டவுன்லோடு ஆகிறது. ஓரிரு நொடிகளில் கணினியில் நிறுவப்படுகிறது. * வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். ஒரு பெரிய கட்டுரையை பாண்டு கன்வெர்ட்டு செய்ய இனிமேல் தாவூ தீர்ந்துப் போய் உட்காரவேண்டியதில்லை. டவுசர் அவுக்கும் வேகத்தில் NHM Converter மூலமாக பைபிளை கூட கன்வெர்டு செய்யமுடியும். * என்னைப் போன்ற தொழில்நுட்ப அறிவிலிகளுக்கு Regional Language Support போன்ற வார்த்தைகளை கண்டதுமே காண்டு ஆகிவிடும். யாராவது தொழில்நுட்பம் தெரிந்தவரை வரவழைத்து ஒரிஜினல் (?) சிடி கொண்டு Install செய்யவேண்டும். அதுபோன்ற தொல்லைகள் எதுவுமில்லாமல் இந்த மென்பொருளை நிறுவினால் அதுவே இந்த கச்சடா வேலைகளை கவனித்துக் கொள்ளுகிறது. நோகாமல் நோன்பு கும்பிடலாம். * தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய கும்மிகளின் எழுத்துருக்களையும் பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். * Key Preview வசதி இருப்பதால் செம தூளாக இருக்கிறது. * இது மிக விரைவில் ஓபன் சோர்ஸோ என்னவோ, ஏதோ ஒரு டெக்னிக்கல் டெர்ம் சொன்னார்கள். அந்த முறையில் வெளிவர இருப்பதால் உலகத்தில் இருக்கும் எந்த மொழியையும் மிக சுலபமாக உள்ளீடு செய்து தட்டச்சலாம் என்றார்கள். * இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்த மென்பொருள் சிடி வடிவில் (மிகக் குறைந்த விலையில்) உலகத் தமிழர்களை சென்றடையப் போகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. * எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம். இதை இலவசமாகவே பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். New Horizon Media நிறுவனத்தின் பதிப்பக வேலைகளுக்காக துட்டு செலவு செய்து தயார் செய்யப்பட்ட இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றி கூற தமிழ்தட்டச்சும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.


இங்கே க்ளிக்கி உபயோகிக்க ஆரம்பிக்கவும்.


No comments: