02 March 2008

கனவுக்கன்னி குஷ்பு


குஷ்புக்கு கோயில் கட்டும் அளவுக்கு அவரை பல வருடங்களாக எனக்கு பிடிக்கும். சென்னைக்கு வந்து ஒண்டிக்கட்டையாக வாழ ஆரம்பித்த பல வருடங்களாக தொலைக்காட்சியையே பார்க்க வாய்ப்பு கிடைக்காதவன் ,இன்று ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
இன்று அரவாணிகள் பங்குபெரும் ஜாக்பாட் நிகழ்ச்சி . வழக்கம் போல் அதே அழகான குஷ்பு தான் நிகழ்ச்சியை நடத்தினார்.ஆரம்பம் முதல் அரவாணிகளை மதித்து பேசியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. போட்டியை வழக்கமாக நடத்திக்கொண்டே இருந்த குஷ்பு , இடையிடையே பல சங்கதிகளை சாதாரமாக கூறிக்கொண்டே இருந்தார். “UNDERSTAND AND ACCEPT THEM AS THEY ARE “ ,”என் உடம்பிலும் உங்கள் உடம்பிலும் இரத்தம் தான் இருக்குது, பின் நமக்குள் என்ன வித்தியாசம்” போன்று பல விஷயங்களை கூறும்போது குஷ்பு மீது மரியாதை வந்தது என்னவோ உண்மை.
இதே போல் நிர்வாணம் செய்வது, அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம் குறித்தும் பேசியனார். பின் பங்கு பெற்ற அரவாணிகள் தங்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை அவர்களே கூறினர்.தங்களின் அங்கிகாரத்திற்க்காக அவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் பார்ப்பது ஜெயா டிவிதானா என்று சிறு ஜயம்கூட வந்தது. எப்படியோ அவர்களின் கூக்குரல் சத்தமாகிக்கொண்டே வருவது என்னமோ உண்மை. நிகழ்ச்சியை நட்த்திய தலைவிக்கும், அதை அனுமதித்த இயக்குனருக்கும் , நன்றிகள்.

முக்கிய குறிப்பு:
என்னால் தனியாக ஒரு புத்தகம் எழுதி, அதன் முன்னுரையில் நன்றி கூற முடியாது. அதனால் இங்கேயே இப்போதே கூறுகிறேன். ஜயா , எனக்கு அரவாணிகளைப் பற்றி எடுத்துக்கூறி, இந்த மரமண்டையும் கொஞ்சம் யோசிக்க வைத்த அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் ( பெயர் சொன்னா , ஏண்டா சொன்னன்னு அடிப்பாரு).

2 comments:

லக்கிலுக் said...

குஷ்பூ குஷ்பூ தான்!!!

காலம் said...

குஷ்பூவை அவருடைய காயங்களோடு அணுகிய யாருக்கும் அவருடைய இச்செயல் மிகையக தெரியாது
அவுங்க ரியலி கிரேட்