24 December 2007

அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது

1.அமெரிக்க நாட்டின் கல்லூரியில் (Harry Harding School) படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பினப்பெண் (Dorothy Counts), நான்கே நாளில் சக மாணவர்களின்(மாணவர்களா??) கேலிப்பேச்சால் படிப்பதையே நிறுத்தி விட்டாள்.

2.1963ஆம் ஆண்டு வியட்நாம் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து புத்த மதத்துறவிகள் நடத்திய போராட்டத்தில் தாங்களே தீயிட்டுக்கொண்டு, ஆடாமல் அசையாமல் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

3.உகண்டாவில் ஒரு குழந்தையின் விரல்கள்.

    4.என்ன தவம் செய்தோம் மானிடராய் பிறப்பதற்க்கு!!!!!!!.

தீயில் இறங்காமல் அதன் வலியை உணரமுடியாது.



திருநங்கைகளின் வாழ்கை கண்ணீரையும் , இந்த சமூகத்தின் மேல் எனக்குள்ள கோபத்தையும் சரிவிகிதத்தில் வரவைக்கிறது. அவர்களின் வாழ்க்கைக்கே வழி சொல்லாத அரசும் சமுதாயமும் அவர்களின் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்லும்?. காலங்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிக்கிடக்கும் நாம் எப்ப தான் அவங்களை அங்கிகரிக்க போகிறோம்....இத்தனை வருடம் இதனை கண்டும் காணாமல் இருந்து விட்டோம் .இப்பொழுது அவர்களிடமிருந்தே ஒரு குரல் கேட்கிறது.


இன்று தனது வாழ்க்கையை எழுத்துக்களாக்கும் வித்யா , தான் அனுபவித்த வலிகளை சொல்ல வருகிறார். அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமூகத்திற்க்கு சாட்டையடியாக இருக்கும்.அதற்க்கான பதில்கள் நம்மிடத்தில் இல்லை .

இந்த புத்தகம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்ற நம்பிக்கையுடன் ,இந்த வருடத்து புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கும் முதல் புத்தகம் இது தான்.

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே....

நாயுடுன்னு சொன்னாலே , எங்க ஊரு கிருஷ்ணசாமி நாயுடு தான் ஞாபகத்துக்கு வருவாரு.எங்க ஊர்ல எல்லார்க்குமே அவர பார்த்தா ஒரு மரியாதை இருக்கும். எப்பவும் கஞ்சி போட்ட சட்டையும் வெள்ள வேட்டியுமாத்தான் இருப்பாரு. வகுப்புக்கு போற எங்கள புடிச்சி சாக்லெட்டு வாங்கி கொடுத்து , ' சீக்கிரம் படிச்சி கலெக்டராயி வாங்கடா ' னு சொல்வாரு.
ஒரு சின்ன வாய்க்கா தகராருல , பக்கத்து தெரு ஆறுமுகம் மேல வழக்கு போட்டாரு.அதுக்கு பழிவாங்குவதர்காக ஆறுமுகம், நாயுடுவின் 17வயது மகளை கெடுத்து கொலையும் செய்தான்.

ஒரு தனி மனிதனையோ , குறிப்பிட்ட சமூகத்தையோ , மதத்தையோ கேவலப்படுத்த நினைத்தால், 'அவர்கள் ' சமூகத்தை சேர்ந்த பெண்களை பலாத்காரம் செய்து அதன் மூலம் எதிரிகளை பழி வாங்கிவிட்டதாக நினைக்கின்றனர். பிற சமூகத்தைத் சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்துவது , அவர்களுடைய மதத்தை ,நம்பிக்கைகளை , மானத்தை கெடுப்பதாக நம்பிக்கொண்டு வருகின்றனர்.


பெண்ணின் உடம்பு மீது செய்யும் ஆக்ரமிப்பு , பிற சமூகத்தினர் மீது நாட்டிய வெற்றிக்கொடியானது. பெண்ணின் மேல் நடத்திய வன்முறைக்கு இந்திய சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களின் மார்பகங்களை அறுத்து , அந்தரங்க உறுப்பின் மீது பிற மதசின்னங்களை வரைந்து, அந்த ஓலங்களின் நடுவேதான் நாம் தேசியகீதம் பாடினோம்.

நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, பெண் மேல் செலுத்தப்படும் வன்முறை ஏட்டுச்சுரக்காயாக இருக்கலாம். ஆனால் இன்றும் உலகமெங்கும் எங்கு கலவரம் வெடித்தாலும், முதலில் பாதிக்கப்படுவது பெண்ணினம் தான்.

இதையெல்லாம் வர்க்க போராட்டமாக நாம் சித்தரிக்க முடியாது. ஆம், நம் நாட்டிற்க்கு முதலில் தேவை
மார்க்ஸ் இல்லை, நம்ம ஈரோட்டு ராமசாமி நாயக்கர் தான்.

23 December 2007

குச்சிமுட்டாயும் ரஜினியும்






நாம சின்ன வயசுல பண்ண பல விசயங்கள நம்ம மறந்தே போயிருப்போம், ஞாபகத்துல இருக்கிற சில நினைவுகளும் இப்ப யோசிச்சுப்பார்தா சிரிப்பு தான் வரும்.அதுலையும் அந்த குச்சி முட்டாய்க்கு சண்ட போட்டது, அடுத்த வீட்டுக்குள்ள வெடி வச்சி மாட்டிகிட்டு, தெரு முழுக்க தொரத்தி தொரத்தி அடி வாங்குனது, குச்சிகம்பு விளையாட்டுல அடி பட்டது , இப்படி எத்தனையோ இருக்கு. சில வருடங்கள் கழித்து நினைத்துப்பார்த்து சிரித்தாலும் அதன் மேல் நமக்குள்ள ஆசை விட்டுப்போகாது.இன்றும் லயன் காமிக்ஸ் தேடிப்படிக்கும் நடுத்தின வயது மனிதர்களும் ,நெய் உருண்டை சாப்பிட ஆசை இருந்தும் அதை கடையில் சென்று கேட்க தயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி எத்தனையோ இருந்தாலும் , இன்றைய தேதியில் 20 வயசுலேர்ந்து 35 வயசுல இருக்குற நிறையபேர்க்கு ரஜினியின் தாக்கம் நிச்சயம் இருந்திருக்கும். அப்படி சின்ன வயசுல பாத்து பாத்து சந்தோசப்பட்ட ஆளு தான் ரஜினி.இன்று ரஜினியின் மேல் நாம் எத்தனையோ குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அவரின் ஸ்டைலும் , கவர்ச்சியும் வேறு எந்த நடிகரிடத்தும் நாம் பார்க்கவும் முடியாது நாம் அதை அதை எதிர்பாரக்கவும் இல்லை.

அப்படிப்பட்ட நடிகனின் திருமண (திருப்பதியில் திருமணம் நடந்தது , இது சென்னையில் நடந்த Reception )புகைப்படங்கள் கிடைத்தது , அதை உங்களிடமும் பகிர்ந்துக்கலாமுனுதான் இந்த பதிவு.

21 December 2007

அவதூறு விமர்சனம் ஆகாது

நந்திகிராமத்தை பத்தி எழுதலாமுன்னு தோனுச்சு. சரி எல்லாரும்போட்டு தாக்குறாங்களே அது என்ன தான் மேட்டர்னு பாத்தா , இப்படியும் நடக்குமானு இருக்கு....


தொடர்ந்து 30 ஆண்டுகளாக மக்கள் நலம் பேணும் அரசாக மேற்குவங்க இடதுசாரி அரசு திகழ்ந்துவருவதும்; தொடர்ந்து 7வது முறையாக வெற்றிபெற்றிருப்பதும் இந்தியாவுக்குள்ளும் இந்தி யாவுக்கு வெளியேயும் பிற்போக்காளர்களுக்கு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. எனவேதான் மேற்குவங்க அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்மத் துடன் கூடிய பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் நக்சலைட் முதல் மம்தா, பாஜக, ராம தாஸ், ஜெயலலிதா என எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். இது ஏதோ தற்செயலானதாகவோ, நந்திகிராமம் சம்பவத்தால் ஏற்பட்ட ஒற்றுமையோ அல்ல. மாறாக ஏற்கெனவே திட்டமிட்ட தளத்தில் உரு வான ஒற்றுமைதான், நந்தி கிராமத்தில் கலவரமாக வெடித்தது என்பதுதான் உண்மை.

சோவியத் யூனியன் இருக்கிறபோது அதற்கு எதி ராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களும் புனை சுருட்டுகளும் அளவற்றவை. ஏனெனில் ஏகாதிபத் திய ஆக்கிரமிப்பையும் அராஜகத்தையும் அத்துமீற லையும் ஓரளவு தடுத்து நிறுத்துவதில் சோவியத் யூனியன் ஆற்றிய பங்குபாத்திரம் முக்கியமானது. எனவே சோவியத் யூனியன் குறிவைத்துத் தாக்கப் பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குமுன் பன்முக உலகம் இயங்கியது. அதை தன்னுடைய ஒற்றை சாம்ராஜ்ய குடையின்கீழ் கொண்டுவர அமெரிக்கா விரும்பியது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு அதனுடைய முயற்சி எளிதானது. இதற்குத்தானே அவர்கள் சோவியத் யூனியன் மீது அவ்வளவு காழ்ப்புணர்ச்சி காட்டினார்கள்.

கிட்டத்தட்ட அதுபோன்ற ஓர் சூழலை இப்போது இந்தியாவில் உருவாக்க பிற்போக்காளர்களும் அதிதீவிரவாதிகளும் ஒன்றுகூடி முயற்சிக்கிறார்கள். மதவெறி சக்திகளுக்கு எதிராகவும்- தாராளமயம், தனியார்மயம், உலகமயத்திற்கு எதிராகவும் - ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிற, குரல்கொடுத்துக்கொண் டிருக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதோடு இணைந்து நிற்கிற இடதுசாரிக் கட்சிக ளுமே.

சரி இப்ப என்ன தான் சொல்ல வார?

முதல்ல இருந்து பாக்கலாம். நந்திகிராமில் இரசாயணத்தொழிற்ச்சாலை அமைக்க வேண்டுமென பட்டாச்சாரியாரின் தலைமயிலான மேற்குவங்க அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது.அதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது என்ற முயற்சியில் ஈடுபடடது. அந்த முயற்சியின் போதே அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதி விவசாயிகளின் எதிர்ப்பால், நிலம் கையகப்படுத்துவது வாபஸ் வாங்கப்பட்டது. அதன் பின் இரசாயணத் தொழிற்சாலையை நந்திகிராமில் நிறுவமாட்டோம் என்று பல்வேறு கூட்டங்களில் தோழர்கள் பலரும் , முதலமைச்சர் பாச்சார்யாவும் தெளிவாகவே கூறினர்.


இது நாள் வரை தொழிற்வளத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் முட்டுகட்டை போட்டு மேற்குவங்கத்தின் வளர்ச்சியை கெடுத்துவிடடனர் என்று கூச்சலிட்டுக்கொன்டிருந்த தி.காங். இந்த தொழிற்ச்சாலை வந்து வளர்சசி ஏற்ப்படடால் எங்கே இனி மேற்குவங்கத்தில் CPM ஆட்சிஐ மாற்ற முடியாதது மட்டுமல்ல ,வேறு எந்த கட்சிக்கும்,கட்சி அலுவலகம் கூட இருக்க அவசியமில்லாமல் போய்விடும் என்பதால் இப்பிரச்சனையை தனது கேவலமான அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். பல்வேறு அதிதீவிரவாதம் பேசும் குழுக்கழுடன் சேர்ந்து பூமி பாதுகாப்பு குழு என்னும் அமைப்பின் மூலம் தனது அரசியல் அலங்கோலத்தை அரங்கேற்றினார்.
மக்களை எழுச்சி பெறச் செய்து புரட்சியை தூண்டுவது தான் ஜனநாயகப்புரட்சி என்பார்கள்.இதனைத் தான் சி.பி.எம். புரட்சி என்றே கருதும். ஆனால் பூமி பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று மார்சு மாதம் 14ஆ தேதி , நந்திகிராமிற்க்குள் நுழைய முற்ப்பட்டது. அவர்களை தடுத்த வந்த போலீசுக்கும் அவர்களுக்கும் ஏற்ப்பட் மோதலில் 14 பேர் கொல்லபட்டனர்.அன்று நடந்த கலவரத்தின் மூலம் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அந்த குழு ஊரை ஆக்கிரமித்தது. அவர்களின் கட்டுப்பாட்டிற்க்குள் வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம், அந்த ஊரிலுள்ள தொடர்பு சாதனங்களையும், ஊருக்குள் செல்லும் வழிகளை அடைத்தனர்.

அதே நாளில் (மார்ச் 14) பட்டாச்சார்யா , நந்திகிராமில் அமைய இருந்த தொழிற்ச்சாலையை வேறு இடத்திற்க்கு மாற்றி விட்டோம் என்றும் அதற்க்கான வேலைகளே ஆரம்பமாகிவிட்டதென்றும் தெரிவித்தார்.

அங்கு முகாமிட்டுள்ள கூலிபடைக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் வந்தது,மக்கள் என்ற பெயரில்,விவசாயிகளின் வேடத்தில் கலவரம் பண்ண.அவங்க பாட்டுக்கு மக்களை வெளியேற்றிக்கொண்டும்,அதற்க்கு மறுப்பவர்களை கொலை செய்து கொண்டும் இருந்தனர். நிலத்திற்க்கும் ,வீட்டிற்க்கும் சட்ட ரீதியாக சொதமானவர்களை வெளியேறிவிட்டு ,அந்த வன்முறை கும்பல் கடந்த 9 மாத காலமாக வெறித்தாடவம் ஆடியது. இதில் இறந்த கட்சி உறுபபினர்களின் பட்டியலை ,பீமன்பாசு ( CPM மாநிலச் செயலாளர்) அடையாளததோடு வெளியிட்டார. சரி அப்ப செத்த போன மிச்சவங்க யாரென்று மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கையில் அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல மம்தா தயங்குவது நியாயம் தானே தல?