23 December 2007

குச்சிமுட்டாயும் ரஜினியும்






நாம சின்ன வயசுல பண்ண பல விசயங்கள நம்ம மறந்தே போயிருப்போம், ஞாபகத்துல இருக்கிற சில நினைவுகளும் இப்ப யோசிச்சுப்பார்தா சிரிப்பு தான் வரும்.அதுலையும் அந்த குச்சி முட்டாய்க்கு சண்ட போட்டது, அடுத்த வீட்டுக்குள்ள வெடி வச்சி மாட்டிகிட்டு, தெரு முழுக்க தொரத்தி தொரத்தி அடி வாங்குனது, குச்சிகம்பு விளையாட்டுல அடி பட்டது , இப்படி எத்தனையோ இருக்கு. சில வருடங்கள் கழித்து நினைத்துப்பார்த்து சிரித்தாலும் அதன் மேல் நமக்குள்ள ஆசை விட்டுப்போகாது.இன்றும் லயன் காமிக்ஸ் தேடிப்படிக்கும் நடுத்தின வயது மனிதர்களும் ,நெய் உருண்டை சாப்பிட ஆசை இருந்தும் அதை கடையில் சென்று கேட்க தயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி எத்தனையோ இருந்தாலும் , இன்றைய தேதியில் 20 வயசுலேர்ந்து 35 வயசுல இருக்குற நிறையபேர்க்கு ரஜினியின் தாக்கம் நிச்சயம் இருந்திருக்கும். அப்படி சின்ன வயசுல பாத்து பாத்து சந்தோசப்பட்ட ஆளு தான் ரஜினி.இன்று ரஜினியின் மேல் நாம் எத்தனையோ குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அவரின் ஸ்டைலும் , கவர்ச்சியும் வேறு எந்த நடிகரிடத்தும் நாம் பார்க்கவும் முடியாது நாம் அதை அதை எதிர்பாரக்கவும் இல்லை.

அப்படிப்பட்ட நடிகனின் திருமண (திருப்பதியில் திருமணம் நடந்தது , இது சென்னையில் நடந்த Reception )புகைப்படங்கள் கிடைத்தது , அதை உங்களிடமும் பகிர்ந்துக்கலாமுனுதான் இந்த பதிவு.

5 comments:

லக்கிலுக் said...

நல்ல பதிவு. வித்தியாசமான சிந்தனைகளோடு பதிவுலகுக்கு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

Very good anna... keep it up...

சரவணன் said...

///நல்ல பதிவு. வித்தியாசமான சிந்தனைகளோடு பதிவுலகுக்கு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!!!//

நன்றி லக்கி , நீர்தான்ய்யா எங்களுக்கு வழிகாட்டி

சரவணன் said...

//Very good anna... keep it up...// thanks aki

Ram Jai Pradeep said...

super mapla...fantastic title..
excellent