06 February 2008

கதையென்றும் சொல்லலாம்

ஒரு வாரம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றிருந்தேன். போன முதல் நாளே, நண்பர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினேன். “தமிழக அரசே! கலைஞர் அரசே! கட்டுப்படுத்து கட்டுப்படுத்து “, குரல் வந்த திசையை நோக்கி திரும்பினேன்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட்டுகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.தோழர்கள் மீது என்றுமே எனக்கு மரியாதை இருந்ததால் அங்கேயே நின்று அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.அவர்களின் கோஷ சப்தம் கூடிக்கொண்டே இருந்தது.அந்த கோஷ்ம் என் கல்லூரி காலத்தை நினைவுப்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ராமேஸ்வரத்திலிருந்து வந்த கிருஷ்ணன் என்ற நண்பனின் அறிமுகம் கிடைத்தது.மிகுந்த முற்ப்போக்கு எண்ணமும் இடதுசாரி சிந்தனையும் உள்ளவன். அவனின் நட்பின் மூலம் என்னிடம் பல மாறுதல்கள் ஏற்ப்பட்டது.அதில் ஒன்று தான் நானும் அவனைப்போலவே கட்சியில் சேர்ந்தது. நான் கட்சியில் இருந்தாலும் தோழர்களின் தவற்றை சுட்டிக்காட்ட தவறியதில்லை.இதனால் எனக்கும் கிருஷ்ணனுக்கும் சண்டை வரும் அளவுக்கு கட்சியின் கொட்டை தாங்கியாகவே மாறியிருந்தான்.

சமூகவிதி சொல்பவர்கள் ஆயுதபூஜை கொண்டாடுவதையும் தீபாவளிக்கு தீக்கதிர் இதழுடன் தீபாவளி மலர் வெளியிடுவதும் வியாபார நோக்கத்துடன் தான் என்றால் , “ சமூகத்தோடு சேர்ந்து தான் புரட்சி செய்யமுடியும் “ என்ற நொட்டை விளக்க்ம் வேறு. அதே தீவாவளி மலரில், நடிகைகளுடைய பேட்டியும்,சில சமயம் பி.ஜே.பியின் விளம்பரமும் அடிமட்ட தொண்டனை குழப்பாமல் இருந்தால் தான் ஆச்சிரியம்.

வேலை கிடைத்து சென்னை வந்துவிட்ட்தால் , கட்சியைப்பறி யோசிக்க்கூட முடியாமல் போய்விட்டது.
காக்கி சட்டைகளின் சப்தம் நினைவுகளை கலைத்தது.சாலை மறியலில் ஈடுபட்டிருந்தோர் காவலர்களைக் கண்டதும் குரல்களை உயர்த்தினர். அவர்களை கைது செய்ய காக்கிகளும் , படமெடுத்து செய்தியாக்க நிருபர்களும் சூழ்ந்தனர்.


”இப்படிவாங்க தோழர், கொடி இந்தாங்க, நீங்க கண்ணாடி போட்டுக்கோங்க தோழர் , தோழர் நீங்களும் வாங்க. அட முடி கலைஞ்சிருக்கு பாருங்க, இந்தாங்க சீப்பு, ம்ம்ம் எல்லாரும் வந்தாச்சாப்பா , இப்ப போட்ட எடுங்க தோழர் “, புகைப்படம் எடுக்கவந்த செய்தியாளரைப் பார்த்து தோழர் ஒருவர் சொன்னது.நிருபர்களை சந்தித்த பின் ,அமைதியாக வண்டியில் அமர்ந்து காவல் நிலையம் சென்று அன்று மாலையே வீடு திருப்பினர்.

இதுவரை நடந்த எல்லா போராட்டங்களும் இப்படித்தான் நடந்திருக்கு , இப்படித்தான் முடிஞ்சிருக்கு “.


3 comments:

- யெஸ்.பாலபாரதி said...

சிரிப்பு வருது தம்பி..!

என்றைக்குமே கதை எழுதும் முன் அது பற்றி கொஞ்சம் யோசிக்கவும், மேலும், புனைவு சேர்த்து எழுதப்படும் போது தான் அது முழுமையான படைப்பாக மாறும். இந்த பதிவில் பெயர் மாற்றம் தவிர்த்து புனைவு என்பது கம்யூனிஸ்டுகள் போட்டுக்கொள்ளும் மேக்கப் விசயங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதீத புனைவுக்கு ஏற்ற தளம் இதுவல்ல..!
யதார்த்தத்தோடு எழுதப்படும் புனைவே நிற்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.. வாழ்த்துக்கள். விரைவிலேயே நல்ல கதையை எழுதி பதிவு போடுங்கள்!!

இந்த சுட்டிகள் சிறுகதை எழுத நினைக்கும் அனைவரின் ஆர்வத்திற்கும் உதவும்.

http://piditthathu.blogspot.com/2006/08/blog-post.html

http://etamil.blogspot.com/2008/01/blog-post.html

வாசித்துப் பார் நிச்சயம் உதவும். இது சிறுகதை எழுதி பிரபலமானவர்களின் கூற்று.

:))))

லக்கிலுக் said...

//”இப்படிவாங்க தோழர், கொடி இந்தாங்க, நீங்க கண்ணாடி போட்டுக்கோங்க தோழர் , தோழர் நீங்களும் வாங்க. அட முடி கலைஞ்சிருக்கு பாருங்க, இந்தாங்க சீப்பு, ம்ம்ம் எல்லாரும் வந்தாச்சாப்பா , இப்ப போட்ட எடுங்க தோழர் “, //

சூப்பர்!

தோழர் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல்!

mdkannan said...

உங்களை போன்ற அதிகம் படித்த ,அதன் மூலம் எழுதவும் கற்றுக்கொண்ட திமிர்பிடித்த மத்திய தர வர்க்கத்திற்கு இது போன்ற அதித கற்பனைகள் வருவது இயல்பே .அது சமுகத்தில் நடக்கம் தவறுகளை கண்டு எதிர்க்க தெரியாமல் ,புலம்பவும் மற்றும் நீங்கள் மறைக்க முற்படும் இயலாமையின் வெளிப்பாடே இந்த கதை .