02 August 2008

உலக சினிமா – இந்த பாமரனின் பார்வையில்


பள்ளிக்காலங்களில் நண்பர்கள் புடைசூள, சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு போகமுடியாத்தால் தான் அடிக்கடி திரை அரங்குகளுக்கு சென்று வந்திருக்கிறேன்.அது வரை சினிமா மீது துளியும் ஆர்வம் இல்லாமல், சரக்கு அடிப்பது,இல்லையேல் புத்தகம் புத்தகம் என்று இருந்திருக்கிறேன்.


கல்லூரிக்காக சென்னை வந்த பின் திரைவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் தயவினாலும், வழிகாட்டினதாலும் கடந்த சில வருடங்களாக நான் பல அருமையான படங்களைப் ரசித்திருக்கிறேன்.

அடிதடி,ஒரு பாட்டு கூட இல்லாத சினிமாவை ரசிக்க ஆரம்பித்து , பின் அதன் மேல் காதல் வயப்பட்டது அப்போது தான்.ஒரு அளவுக்கு மேல்,உலக சினிமாவுக்கு ஒரு அடிமைபோல் , தினம் ஒரு படமாவது பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு,சோத்துக்கே வழியில்லாதப்ப கூட பார்சன் காம்ப்ளக்‌ஸ் வாசலில் போய் நின்றிருக்கிறேன். சில நாட்கள் கடன் சொல்லியாவது சிடி வாங்கிவந்து பார்த்தாக வேண்டிய அளவுக்கு வெறியனாகவே மாறியிருந்தேன்.

இன்று வரும் தமிழ் சினிமா மீதுள்ள கோபமும்,நான் பார்த்து ரசித்த பிற மொழிப்படங்களின் தாக்கமும், கடந்த சில வருடங்களாகவே திரைஅரங்கத்திற்க்கு செல்வதை விட்டு விட்டேன்.எத்தனையோ சினிமா பார்த்தாலும், யாரேனும் “ நல்ல சினிமா எப்படி இருக்கணும் “ என்றால் தயங்காமல் சொல்வேன் “உதிரிப்பூக்கள்” .அந்தப்படத்தைப் பார்த்தாலே போதும், ஒரு நல்ல சினிமாவின் இலக்கணம் புரிந்துவிடும்.

சினிமா என்பது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும், அது ஏதோ எங்குமே நடக்காத சம்பவங்களை மட்டும் கொண்டிருக்க கூடாது. (ஒருவனே பத்து பேரை அடிப்பது, காதல் வசப்பட்டால் பாட்டு உடனே எப்படித்தான் வருதோ).உலக சினிமாவில் பிண்ணனி இசை என்பது நடக்கும் சம்பவங்களை நம் மூளையையும் தாண்டி உணர்வுகளை தொட்டு இழுக்க பயன்படுத்துகிறார்கள். நாம் தான் இன்னும் தையதக்கானு குதிச்சிட்டு இருக்கோம்.

நான் பார்த்த படங்கள் பல நாட்கள் இரவு தூக்கத்தை விழுங்கியிருக்கிறது.நாயகனும் நாயகனும் ஒன்னு சேர வேண்டும் இல்லேனா பிரிய வேண்டும் , இது தான் தமிழ் படங்களின் தலையெழுத்து, ஆனால் உலக சினிமாவில்(நிறைய படங்களில்) இறுதியில் மெல்லிய இசையுடம் முடிவை நம் தலையில் இறக்கிவிட்டு, அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க இரவு பூரா அவங்களுக்காக அழுதிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பாட்டியையும் பேரனையும் மட்டும் வைத்துக்கொண்டு எடுத்த “The Way Home” ல் , அந்த பாட்டிக்காக நான் உண்ர்ச்சி வசப்பட்டது என் வாழ்வில் வேறு எப்போது நடந்திராதது. ஒரு படத்தின் வெற்றி என்பது இது தான் , பார்ப்பவர்களின் மனதில் ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். அந்த தாக்கம் குறைந்தபச்ச்ம் ஒரு நாளாவது நம்மளை பாடாய் படுத்தணும்.

இது எல்லாம் இருக்கிறது உலக சினிமா, எதுவுமே இல்லாம அஞ்சு பாட்டும் , ஒரு சண்டையும் உள்ளது நம்ம சினிமா...


3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்களுக்குப் பிடித்த உலகப் படங்கள் பட்டியல் தந்தால் நன்றாக இருக்கும். நன்றி.

Anonymous said...

இப்போ கொஞ்ச நாளா -- ஒரு ரெண்டு வருஷம்னு வெச்சுக்கலாம் -- தான் நான் உலக சினிமா பாக்க ஆரம்பிச்சேன். அது என்னவோ, இப்போ எல்லாம் ஒரு டூயெட் பாடலையும் ஒரு சண்டை காட்சியையும் பாத்தாலே கடுப்பா இருக்குது. என்னல்லாமோ மாற்றம் கொண்டு வராங்க, புரட்சியா படம் எடுக்கறேன்னு சொல்றாங்க, இந்த ரெண்டு க்ளிஷேவையும் விட்டு தொலைக்க மாட்டேன்கரான்களே!

காலம் said...

நீயா இது