11 November 2008

A WEDNESDAY




கடைக்கு போய் காய்கறி வாங்கிவரும் வழியில் ரொம்ப அசால்ட்டாக ரயில் நிலையம் , காவல் நிலையம் உட்பட ஜந்து இடங்களில் குண்டு வைத்துவிட்டு மனைவியுடன் பேசிக்கொண்டே வருகிறான் நமது கதையின் நாயகன் (வயது சுமார் 50 இருக்கலாம்).நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த மாடியில்,அவனுக்கு ஒரு குட்டி அலுவலகம் மாதிரி கனிணி, 5,6 செல்போனுடன் தயாராக இருக்கிறது .போலீசுக்கு, பாம் வைத்த தகவலை தெரிவிக்கிறான். அப்படியே தொலைக்காட்சி நிருபருக்கும் அவனே சொல்கிறான்.
பேசி முடித்த அடுத்த நிமிடம் சிம் கார்டை மாற்றி புது சிம்மிலிருந்து , மறுபடியும் போலீசுக்கு பேசுகிறான் . காவல் நிலையத்தில் பாம் வைத்திருக்கும் இடத்தை அவனே சொல்கிறான். போலீசின் ஒவ்வொறு நடவடிக்கையும் நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி நிருபணருக்கு சொன்னது இதற்க்கு தான்)செய்தி மூலம் தெரிந்து கொள்கிறான்.
மேலும் 5 இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் அதன் இடங்களைச்சொல்ல வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.
காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அவன் பேசும் இடத்தைக்கூட கண்டு பிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது.அதனால் வேறு வழியில்லாமல் அவனின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.
தீவிரவாதிகளை விடுவித்தவுடன் , அவர்களை அவன் சொன்ன இடத்தில் விட்டுவிட்டு போலீஸ் திரும்புகிறது. ஆனால் அந்த தீவிரவாதிகள் நிற்க்கும் இடத்தில் குண்டு வெடித்து அவர்கள் இறக்கின்றனர்..
அதன்பின் ,; ”நான் ஒரு சாதாரண குடிமகன் ,இந்த தீவிரவாதிகள் மும்பையில் குண்டு வைத்தவர்கள் ,எங்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை கெடுத்தவர்கள் “ என்கிறான். தான் குண்டு வைத்த மற்ற இடத்தைப்பற்றி சொல்கிறான்.”ஒவ்வொறு மனைவியும் கணவனுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசுவது , அவன் உயிரோடு இருக்கிறானா என்று அறியத்தான் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் , ஆனால் இன்று மும்பையில் வாழ்க்கையில் அது தான் ந்டந்து வருகிறது . அதனால் தான் அந்த தீவிரவாதிகளை கொன்றேன்”என்கிறான்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது , தீவிரவாதிகளை முஸ்ஸீம்களாக காட்டியதாக இருந்தாலும் , அவர்களின் உணர்வுகள் புண்படும்படாதபடி அழகாக படம் எடுக்கப்பட்டிறுக்கிறது.
இன்னொறு சிறப்பு அம்சம் என்னவெனில் ,கதையின் நாயகனின் பெயரை எங்கேயும் தெரியப்படித்தாதது. அதனால் அவனின் மதத்தையும் கண்டுபிக்கமுடியாதபடி அமைத்திருகிறார்கள்.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் அருமையான எடிட்டிங்கில் அதன் குறைகள் மறைக்கப்பட்டிருகிறது.

No comments: