07 November 2008

நான் எப்படி?

எனது வேலை : கவிதை எழுதுவது , நாட்டுக்கு உழைப்பது , இமை பொழுதும் சோராதிருப்பது.........பாரதியார்
நீ பாட்டுக்கு பாடிட்டு போய்ட பாரதி........ எனக்கும் ஆசை தான்... திராணி இல்ல பா"...


கவிதை எழுதுவதிலுள்ள கவுரவம்நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைஉணர்ந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது" என்று சொன்ன புக்கார் வாஷிங்டன் கருத்தோடு ஒத்துப் போகிற ஆசாமி நான்.
அதன்படியே வாழ்வையும் அமைத்துக்கொள்ள முனைந்து வருகிறேன்.படிப்பது மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்று. அதை விட பேசுவது மிகவும் பிடிக்கும். எழுத்தை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு எழுதத்தெரியாதவன் நான்.
ஒவ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை. மரணம் என்னை நெருங்கும் வரை எம்மக்களின் சுயத்தினை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது தவிர.. வேறெந்த ஆசைகளும் கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் வாழ் நாளில் தான் வாழும் சமூகத்தில், தன்னோடு வாழும் மக்களுக்காக "ஏதாவது" செய்து விட்டுப் போகவேண்டுமென்பது அடியேனின் ஆசை.
------------------------------------------------------------------------


அடுத்த வேளை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
நீயும் நானும் ஒன்று!

சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..
நீயும் நானும் ஒன்று!

இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும்
அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று!

1 comment:

Nagasubramanian said...

//குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று! //
இந்த வகையில நானும் நீங்களும் ஒன்று தான்